மலேசியாவை ஒரு பல்லின மக்களின் நாடாக முன்னிலைப்படுத்துவது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று அறிவித்து இருக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் வாதம் ஓர் அவதூறாகும் என்பதுடன் நகைப்புக்கு உயரியதாகும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நாட்டை 22 ஆண்டு காலம் ஆட்சி செய்த துன் மகாதீர், அரசியலைமைப்பு சட்டத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்று அந்த நிபுணர்கள் வாதிடுகின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தின் 8 ஆவது விதியின் கீழ் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்றும், அனைவரும் சமமான பாதுகாப்பை கொண்டுள்ளனர் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுவதாக அரசியலமைப்புச் சட்ட நிபுணரும் வழக்கறிஞருமான பாஸ்த்தியான் பியுஸ் வென்டர்கோன் கூறுகிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் மலாய் மேலாதிக்கத்தை உயர்த்திப்பிடிக்கவில்லை. .
மலாய்க்காரர்களின் உரிமை மற்றும் இஸ்லாத்தின் சிறப்பு நிலைப்பாட்டை ஆங்கீகரித்திருந்தாலும் வெவ்வேறு இனப் பின்னணியைக் கொண்ட மக்கள், மலாய் மேலாதிக்கத்திலிருந்து பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அரசியலமைப்பு சட்த்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் பாஸ்த்தியான் பியுஸ் வென்டர்கோன் தெளிவுபடுத்தினார்.
தவிர, மலேசியா ஒரு பல்லின சமூகத்தை கொண்ட ஒரு நாடு என்று அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தவில்லை என்பதற்காக மலேசியா பல்லின மக்களை கொண்ட ஒரு நாடு அல்ல, மலாய்க்காரர்களே மேலாதிக்கம் கொண்டவர்கள் என்று பொருள்படாது என்பதையும் அந்த சட்ட நிபுணர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் அரசியலமைப்புச்சட்டம் என்பது ஓர் அடிப்படையே தவிர நாட்டில், சட்டம் இயற்றும் உச்ச பரிபாலனமான நாடாளுமன்றம், மலேசியா பல்லின மக்களை கொண்ட ஒரு நாடு என்று அங்கீகரித்து இருப்பதையும் அவர் விளக்கினார்.
அரசியலமைப்பு சாசன நூலில் அட்டையை மட்டும் படித்து விட்டு எந்தவொரு முடிவுக்கு வந்து விடக்கூடாது, அதன் பக்கங்களிலும் நமது ஆழமான பார்வை பாய வேண்டும் என்று நாட்டின் தலைசிறந்த சட்ட நிபுணரான பாஸ்த்தியான் பியுஸ் வென்டர்கோன் அறிவுறுத்துகிறார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
