May 13, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு
அரசியல்

Share:

சிரம்பான், ஏப்ரல்.29-

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவில் காலியாக உள்ள நான்கு ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கான இடங்களை நிரப்புவது குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்துள்ளார்.

அம்னோவைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள் மந்திரி புசாருக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, அந்த கட்சியின் வசம் இருந்த நான்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிகளும் தற்போது காலியாகியுள்ளன.

மாநில ஆட்சியாளரின் அறிவுறுத்தலின்படி, தற்போது சிறுபான்மை அரசாங்கத்தை வழிநடத்தி வரும் அமினுடின், நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க காலியாக உள்ள இடங்களுக்கான தற்காலிகப் பொறுப்புகள் அல்லது புதிய நியமனங்கள் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அமினுடின் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், மாநிலத்தின் அரசியல் நிலைத்தன்மையை உறுதிச் செய்ய அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி