கோலாலம்பூர் , அக்டோபர் 26-
நமது பணத்தை சூறையாடிவர்கள், இனி வீட்டில் தடுப்புக்காவல் மூலம் ஓய்வெடுக்கும் நிலை ஏற்படலாம் என்று கெப்போங் டிஏபி எம்.பி. லிம் லிப் இன்ஜி தெரிவித்துள்ளார்.
இது போன்ற செயல்களை அனுமதித்தால் எதிர்காலத்தில் ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
எவ்வளவு பணத்தை, எப்படி கொள்ளையிட்டாலும், எதிர்காலத்தில் மோசமான விளைவுகள் ஏற்படாது. நிம்மதியாக வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு விதைத்து விடும் என்று லிம் லிப் இன்ஜி குறிப்பிட்டுள்ளார்.
தமது முகநூலில் யாருடைய பெயரையும் லிம் லிப் இன்ஜி , குறிப்பிடவில்லை என்ற போதிலும் சட்டத்தின் பிடியில் சிக்கி தண்டிக்கப்பட்டவர்களை சிறைத் தண்டனைக்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பது மீதான உத்தேசத்திட்டம் குறித்து கருத்துரைக்கையில் அந்த டிஏபி எம்.பி. இதனை தெரிவித்துள்ளார்.









