Nov 16, 2025
Thisaigal NewsYouTube
கூட்டணியை அதிரவிட்ட ம.இ.கா.! தேமு-வை விட்டு வெளியேறத் தீர்மானம்; ஆனாலும் அன்வாருக்கு முழு ஆதரவு உறுதி!
அரசியல்

கூட்டணியை அதிரவிட்ட ம.இ.கா.! தேமு-வை விட்டு வெளியேறத் தீர்மானம்; ஆனாலும் அன்வாருக்கு முழு ஆதரவு உறுதி!

Share:

ஷா ஆலாம், நவம்பர்.16-

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த தேசிய முன்னணியுடனான கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கான ஒருமனதான தீர்மானத்தை ம.இ.கா. பேராளர்கள் நிறைவேற்றியுள்ளதாக அதன் தலைவர் தான் ஶ்ரீ எஸ்.எ விக்னேஸ்வரன் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அதிரடி முடிவை எடுத்தாலும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்திற்கு அவருடைய பதவிக் காலம் முடியும் வரைத் தொடர்ந்து முழு ஆதரவு அளிப்போம் என்று ம.இ.கா. உறுதியளித்துள்ளது.

"நாங்கள் சலிப்படைந்துவிட்டோம்! கௌரவமான அதிகாரப் பகிர்வு சூத்திரம் தேவை!" என்று ஆவேசத்துடன் பேசிய அவர், இந்த விலகல் முடிவிற்கான காரணத்தையும் வெளிப்படையாகத் தெரிவித்தார். இருப்பினும், ம.இ.கா. ஒரு போதும் தனியாகச் செல்லாது என்றும், தேசிய முன்னணியை விட்டு விலகிய பின்னரே எந்தக் கூட்டணியில் இணைவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இன்று ஷா ஆலாம், IDCC மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ம.இ.கா. ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பேசிய விக்னேஸ்வரன், இந்தக் கட்சியின் முடிவைக் குறித்துப் பிரதமர் அன்வாரிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்த போது, அவர் முடிவைப் பரிசீலிக்குமாறு தமக்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார். இந்தக் கூட்டணியை விட்டு விலகுவது குறித்த மிக முக்கியமான இறுதி முடிவு மிக விரைவில் கட்சியின் மத்திய செயற்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

Related News