Apr 15, 2026
Thisaigal NewsYouTube
ஹம்சாவின் பதவி விலகல் ஒரு தந்திரமான நடவடிக்கை - முன்னாள் பெர்சாத்து தலைவர் கருத்து
அரசியல்

ஹம்சாவின் பதவி விலகல் ஒரு தந்திரமான நடவடிக்கை - முன்னாள் பெர்சாத்து தலைவர் கருத்து

Share:

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ஹம்சா ஜைனுடின் விலகியது, ஒரு “தந்திரமான” நடவடிக்கை என பெர்சாத்து கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான வான் அஹ்மத் ஃபைசல் வான் அஹ்மத் கமால் தெரிவித்துள்ளார்.

பெரிகாத்தான் நேஷனல் தலைவர் அகமட் சம்சூரி மொக்தாரை கட்சியின் தொடர்ச்சியான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டே, இந்த பதவி விலகல் முடிவானது எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்சூரியின் நம்பகத்தன்மையை மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கியும், அவரை ஒரு பலவீனமான தலைவராக சித்தரித்தும், தனது முன்னாள் கட்சி "இழிவான அரசியலில்" ஈடுபட்டதாகவும் வான் அஹ்மத் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலைமையை புரிந்துகொண்ட ஹம்சா, பதவி விலகியதன் மூலம் சம்சுரி மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை தடுக்க உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட பெர்லிஸ் மாநில அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக PAS மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு இடையிலான உறவுகள் இறுக்கமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News