Dec 19, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்- அமைச்சர் கோபிந் சிங் டியோ: தகவல் தொழில் நுட்ப மேம்பாடு நமது பாரம்பரியத்தை கட்டிக்காக்கும்

Share:


ஜன.14-

பொங்கல் விழா என்பது இந்தியர்களின் முக்கியமாக உலகத் தமிழர்களுக்கான ஓர் உன்னத விழா. பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில், பொங்கல் விழா என்பது அனனத்து இனமும் நன்கு அறிந்த ஒரு மாபெரும் விழா ஆகும். பொங்கல் விழாவினை மக்களளொடு இனைந்து
நான் பல முறை கொண்டாடியிருக்கிறேன்.


பொங்கல் விழாவானது, நன்றியுணர்வு, செழிப்பு மற்றும் ஒற்றுமை உணர்வு மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. உழவு தொழில் பாரம்பரியத்தில் வேரூன்றிய பொங்கல், உழைப்பின் மதிப்பு, இயற்கையின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தில் மகிழ்ச்சியையும், நமக்கு நினனவூட்டுகிறது.


கடந்த பிரவாசி மாநாட்டின் போது அதிகாரபூர்வ துவக்கம் கண்டா மலேசிய இந்திய இலக்கவியல்மன்றத்தின் வழி இலக்கவியல் விழிப்புணர்வையும், தற்கால தேவைக்கேற்ப இலக்கவியல் தகவல்களையும் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் அதே வேளையில், இலக்கவியல் துணையோடு, நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டுப் பெருமைகளையும் உலகரியச் செய்ய இயலும். இந்தத் துறை நாம் அறிந்து தெளிவது காலத்தின் கட்டாயம் ஆகும். இலக்கவியல் மேம்பாடு நம் அறிவை உயர்த்துவதோடு, பாரம்பரியத்தை காக்கும் வல்லமை கொண்டது. தொழில்நுட்பம் என்பது நம்மை எல்லைகள் கடந்து அனைவரையும் இணைகிறது.


இலக்கவியல் துறையில், இளைய சமூகத்தினரிடையே கல்வியறிவை மேம்படுத்துதல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் வாய்ப்புகளை வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியன மலேசிய இலக்கவியல் அமைச்சின் நோக்கம் ஆகும்.

Related News