கோத்தா கினபாலு, நவம்பர்.15-
17-வது சபா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, இன்று சனிக்கிழமை காலை, அம்மாநிலம் முழுவதும் 25 மையங்களில் வேட்புமனுத் தாக்கல் சுமூகமான முறையில் நடைபெற்றது.
இன்று காலை 9 மணியளவில் துவங்கிய வேட்புமனுத் தாக்கல், சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு, 10 மணியளவில் நிறைவு பெற்றது.
ஒவ்வொரு வேட்புமனுத் தாக்கல் மையங்களிலும், பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகளால், இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
வேட்புமனுத் தாக்கல் மையங்கள் பலவற்றில், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அவர்களது ஆதரவாளர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்திருந்தனர்.
அனைத்து மையங்களிலும், போலீஸ் பாதுகாப்புடன், வேட்புமனுத் தாக்கல் அமைதியான முறையிலும், சுமூகமாகவும் நடைபெற்று முடிந்துள்ளது.
இதனிடையே, வரும் நவம்பர் 25 ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிக்கும் நாளாகவும், நவம்பர் 29 ஆம் தேதியை வாக்குப்பதிவு நாளாகவும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.
சுமார் 14 நாட்கள் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரங்கள், வரும் நவம்பர் 28-ஆம் தேதி, இரவு 11.59 மணியளவில் நிறைவுக்கு வரும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.








