கோலாலம்பூர், அக்டோபர்
உதவித்தொகை எனப்படும் பொருட்களுக்கான உதவித் தொகையை ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை, அவ்வளவு பிரபலமாகவில்லை என்ற போதிலும் அந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடரப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
உதவித் தொகையை குறைப்பது மூலம் கோடிக்கணக்கான வெள்ளியை அரசாங்கம் சேமிக்க முடியும். அதன் மூலம் சாமானிய மக்களுக்கு உதவ முடியும் என்று அரசாங்கம் திடமாக நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
மீதப்படுத்தக்கூடிய இந்த உதவித் தொகை அரசாங்கம், ரொக்கப்பணம் வடிவில் உதவித் தேவைப்படக்கூடிய சாமானிய மக்களுக்கு உதவ முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.








