Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஹாடி அவாங்கிற்கு மாற்றாக யாரும் முடிவு செய்யப்படவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஹாடி அவாங்கிற்கு மாற்றாக யாரும் முடிவு செய்யப்படவில்லை

கோத்தா பாரு, ஜூன்.14-

பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அரசியலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு மாற்றாக ஒருவரைக் கட்சியின் தலைவராக நியமிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டு காலமாக பாஸ் கட்சியின் தலைவராக இருந்து வரும் அப்துல் ஹாடி அவாங்கின் தலைமைத்துவம் குறித்து இதுவரை யாரும் கேள்வி எழுப்பியது இல்லை. எனவே பாஸ் கட்சிக்கு மாற்றுத் தலைவர் என்ற பேச்சுக்கு இப்போது இடமில்லை என்று துவான் இப்ராஹிம் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →