Dec 3, 2025
Thisaigal NewsYouTube
டேவிட் மார்ஷலின் அனல் பறக்கும் பிரச்சாரம் தொடங்கியது
அரசியல்

டேவிட் மார்ஷலின் அனல் பறக்கும் பிரச்சாரம் தொடங்கியது

Share:

பினாங்கு, பிறை சட்டமன்றத்தொகுதியில் “மரம்” சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் மார்ஷல் ஆறாவது நாளாக தமது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 15 ஆண்டு காலமாக பிறை மக்களுடன் ஒன்று கலந்தவராக திகழும் டேவிட் மார்ஷல், தொகுதியைச் சேர்ந்த இந்தியர்களும், சீனர்களும் தமக்கு அளித்து வரும் ஆதரவு உற்சாகத்தை அளிக்கும் வகையில் உள்ளதாக விவரித்தார்.

ஒரு சுயேட்சையாக போட்டியிடும் தமக்கு பிறை மக்கள் ஆதரவு அளித்து, ஒரு சட்டமன்ற உறுப்பினராக ஆக்குவார்களேயானால் புதியதொரு மாற்றத்தை நிச்சயம் எதிர்பார்க்க முடியும். பிறை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று சமூகப் போராட்டவாதியுமான டேவிட் மார்ஷல் தெரிவித்துள்ளார்.

Related News