Mar 4, 2026
Thisaigal NewsYouTube
சபா தேர்தல்: வாக்காளர்களை அழைத்து வர போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது பாரிசான்
அரசியல்

சபா தேர்தல்: வாக்காளர்களை அழைத்து வர போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது பாரிசான்

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.29-

இன்று சனிக்கிழமை நடைபெற்று வரும் சபா மாநில 17-ஆவது சட்டமன்றத் தேர்தலில், அதிக அளவிலான உள்ளூர் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில், பாரிசான் நேஷனல் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.

சபா மாநிலத்தில் பல கிராமங்களில் சாலை வசதிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதாலும், வாக்களிப்பு மையங்களிலிருந்து அவர்கள் நீண்ட தொலைவில் வசிப்பதாலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மசீச பொதுச் செயலாளர் டத்தோ சோங் சின் வூன் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையினால் சில கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதால், அப்பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க மிகவும் சிரமப்படுவார்கள் என்றும் சோங் சின் வூன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவர்களை வீட்டிருலிருந்து வாக்களிப்பு மையங்களுக்கு அழைத்து வர இந்த கார் சேவைகளானது பயன்படுத்தப்படவுள்ளன.

மேலும், கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றுள்ள தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்களிடம் தங்களது தொடர்பு எண்கள் பகிரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சோங் சின் வூன், போக்குவரத்து வசதிகள் தேவைப்படுவோர் தங்களது தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்