Oct 25, 2025
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்
அரசியல்

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்

Share:

நவ. 29-

ஜோகூர் மாநிலத்தில் உள்ள 10 உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி மறுமதிப்பீட்டின் மீது 30 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தள்ளுபடி அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என மாநில வீட்டுவசதி, உள்ளாட்சித் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் Mohd Jafni Md Shukor தெரிவித்தார்.

அவர் கூறுகையில், சொத்து வரி மறுமதிப்பீடு செய்யப்பட்டு வரும் 10 உள்ளாட்சி அமைப்புகளில் Batu Pahat நகராட்சி, Muar நகராட்சி, Segamat நகராட்சி, Pontian நகராட்சி,
Kota Tinggi மாவட்ட மன்றம், Tangkak மாவட்ட மன்றம், Yong Peng மாவட்ட மன்றம், சிம்பாங் ரெங்காம் மாவட்ட மன்றம், MERSING மாவட்ட மன்றம், LIPIS மாவட்ட மன்றம் ஆகியவை இதில் அடங்கும் என்றார்.

2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு சொத்து வரி மறுமதிப்பீடு செய்யப்படவில்லை என்றும், கோவிட் – 19 பெருந்தொற்றின் காரணமாக இது மேலும் தாமதமானது என்றும் அவர் கூறினார்.

மக்களின் குரலுக்கு செவி சாய்க்கும் அரசாக இருப்பதால், இந்த 10 உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி மறுமதிப்பீடு செய்யப்படுவதைத் தொடர்ந்து, புதிய சொத்து வரி மதிப்பீட்டில் 30 விழுக்காடு தள்ளுபடி வழங்க Datuk Onn Hafiz ஒப்புக்கொண்டதாக Mohd Jafni கூறினார்.

கடந்த ஆண்டு ஐந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதே போன்ற தள்ளுபடி வழங்கப்பட்டது.
இந்த 10 உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி 36.91 மில்லியன் ரிங்கிட் அதிகரித்துள்ளது என்றும், 2013 உடன் ஒப்பிடுகையில் சராசரியாக 18 விழுக்காடு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Related News