Oct 28, 2025
Thisaigal NewsYouTube
கெடா மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு
அரசியல்

கெடா மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு

Share:

கூலிம், நவ- 10

கெடா மாநிலத்தில் முதன் முறையாக மாநில அளவிலான தீபாவளி திறந்ந இல்ல உபசரிப்பு ஆசிரம குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது . இந்த உபசரிப்பில் கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ ஹஜி முகமாட் சனுசி பின் மாட் நூர் ஆசிரம குழந்தைகளுக்கு அவரின் கையால் தோசை சுட்டி வழங்கியது அங்குள்ளவர்களை ஆனந்தததில் ஆழ்த்தியத்தாக ஆசிரம குழந்தைகள் தெரிவித்தனர் .

இவ்வருடத்தின் கெடா மாநில அளவிலான திறந்த இல்ல உபசரிப்பை மாநிலத்தின் இந்தியர்களின் ஆட்சி குழு உறுப்பினரும் கூலிம் சட்டமன்ற உறுப்பினருமான வோங் ஜியா ஜெங் அவரின் ஏற்பாட்டில் டத்தோ ஸ்ரீ ஹஜி முகமாட் சனுசி மாட் நூர் அவரின் இந்தியர்களின் சிறப்பு அதிகாரியாக பிகே குமரேசன் அவரின் ஒத்துழைப்புடன் ஐந்து ஆசிரமங்களை ஒன்றிணைத்து தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

நேற்று கூலிம் பாடாங் மேஹாவில் அமைந்துள்ள பத்து கிரேஸ் ஆசிரமத்தில் தீபாவளி அலங்காரத்துடன் இந்நிகழ்வு சிறப்பாக ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்குச் சிறப்பு வருகையாளராக கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ ஹஜி முகமாட் சனுசி பின் மாட் நூர் கலந்துக் கொண்டார்.

முகமாட் சனுசியின் சிறப்புரையில் தீபாவளி பண்டிகை நரகாசுரன் எனும் அசுரனை அழித்து மக்களுக்கு இன்பத்தை வழங்கிய தினத்தை தீபாவளியாகக் கொண்டாடுவத்தாக புராணம் கூறுகிறது அதுபோல் எவ்விதமான அசுரர்களும் இந்த கெடா மாநிலத்தில் இல்லை என்பதும் மூவின மக்களின் நலன்களைக் காத்துவருவதும் உண்மையாகும் என்றார் முகமாட் சனுசி. இம்மாநிலத்தில் இந்திய மக்கள் மிகவும் சிறப்பாகவே இருந்து வருகின்றனர் . அவர்களுக்கு எழும் பிரச்சனைகள் அனைத்தும் செவி சாய்த்து வருவத்தாக சனுசி குறிப்பிட்டார் . 2024 ஆம் தீபாவளி திறந்த உபசரிப்புக்கு கூலிம் மாவட்டத்திலிருந்து மூன்று ஆசிரமங்களும் சுங்கைப்பட்டாணி மாவட்டத்திலிருந்து இரண்டு ஆசிரமங்களும் வருகையளித்தனர்.

மேலும் , இந்த ஐந்து ஆசிரமங்களுக்கும் மாநில அரசாங்கத்தின் சார்பில் தல வெ 1000 ரிங்கிட் ஒவ்வொரு ஆசிரமத்திற்கும் வழங்கப்பட்டது .அதுடன் பத்தி கிரேஸ் ஆசிரமத்திற்கு கூடுதலாக தன் சொந்த பணமாக வெ 5 ஆயிரத்தையும் முகமாட் சனுசி எடுத்து வழங்கினார் .

இந்நிகழ்வில் கூலிம் மாவட்ட இலாகா அதிகாரி , கூலிம் நகராண்மை கழகத் தலைவர் டத்தோ ஹஜி ஹெல்மி யுசோப் , லுனாஸ் மற்றும் மெர்போ பிளாஸ் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் என 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டுச் சிறப்பித்தனர்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

கெடா மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு | Thisaigal News