பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் சட்டத்திட்டத்தின்படி , அனைத்து அங்கத்துவக் கட்சிகளின் ஒருமித்த சம்மதம் இல்லாமல் பெர்சத்து கட்சியை கூட்டணியில் இருந்து நீக்க முடியாது என அதன் தலைவர் டான்ஸ்ரீ முகிதின் யாசின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பெர்சத்து கட்சி விரைவில் கூட்டணியில் இருந்து நீக்கப்படும் என்ற செகுபார்ட்டின் கூற்றை அவர் முற்றாக நிராகரித்தார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான பெர்சத்துவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகிதின், தொகுதிப் பங்கீட்டில் தங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதன் மூலம் கூட்டணிக் கொள்கைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து கட்சியின் வழக்கறிஞர்கள் ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பெர்சத்து கட்சி தனித்து 24 இடங்களில் போட்டியிடுகிறது.








