கோத்தா கினபாலு, நவம்பர்.28-
நாளை சனிக்கிழமை நடைபெறும் சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜிஆர்எஸ் GRS கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு மையமான Ilham Centre ஆருடம் கூறியுள்ளது.
சபா மாநில தேர்தலுக்கான பிரச்சாரம் அனைத்தும் இன்று வெள்ளிக்கிழழை இரவு 11.59 மணியளவில் முடிவுறும் நிலையில், ஆகக் கடைசியாக கடந்த சில நாட்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தலைமையிலான GRS கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் சபா ஆட்சியை வழிநடத்தும் என்று அந்த மையம் கூறுகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் GRS வெற்றிப் பெற்ற பலம் வாய்ந்த தொகுதிகளை அக்கூட்டணி மீண்டும் தற்காத்துக் கொள்ளும் என்று Ilham Centre தெரிவித்துள்ளது.








