நவ. 17-
மலேசியாவுக்கும் ஐக்கிய அரபு சிற்றரசுக்கும் இடையே இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. குறிப்பாக, இயற்கை பேரிடர் மேலாண்மை, ஹலால் உணவு உற்பத்தி, உணவு பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதாக துணைப் பிரதமர் Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
இன்று துபாயில் அந்நாட்டு எரிசக்தி, வசதிகள் அமைச்சர் Suhail Mohamed al Mazrouei ஐ சந்தித்தபோது Zahid Hamidi பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாகக் குறிப்பிட்டார். அந்தச் சந்திப்புக் கூட்டத்தில், போக்குவரத்து, துறைமுக மேலாண்மை துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் இரு நாடுகளும் விவாதித்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பயன்படுத்தி வருவதால், மலேசியாவும் இதைப் பின்பற்றலாம் என்றார் Zahid..
இரு நாடுகளின் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை அடுத்த ஆண்டு நடைபெறும் ASEAN – GCC கூட்டமைப்பு உச்ச மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.








