ஷா ஆலாம், டிசம்பர்.26-
பெர்லிஸ் மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் கேட்டுக் கொண்டார்.
பாஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் பெர்சாத்து கட்சியின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும், நடப்பு மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததைத் தொடந்து மந்திரி பெசார் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது நெருக்கடியில் இருக்கும் பெர்லிஸ் அரசியல் சர்ச்சைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்கு மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஹம்ஸா ஸைனுடின் வலியுறுத்தினார்.








