Oct 23, 2025
Thisaigal NewsYouTube
ரோஸ்மா மன்சோர் ஒரு வழக்கில் மட்டுமே தப்பியுள்ளார்
அரசியல்

ரோஸ்மா மன்சோர் ஒரு வழக்கில் மட்டுமே தப்பியுள்ளார்

Share:

கோலாலம்பூர், டிச. 19-


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், ஒரு வழக்கில் மட்டுமே தப்பியுள்ளார். அவர் இன்னமும் பல்வேறு குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதன்மையான வழக்கு சரவாக் மாநிலத்தில் உள்ள 369 பள்ளிகளுக்கு சூரிய சக்தி விளக்குகளை பொருத்தும் லஞ்ச ஊழல் வழக்காகும். 1.2 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அந்த சூரிய சக்தி விளக்குகளை பொருத்தும் பிரதான திட்டத்தில் 187.5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக ரோஸ்மாவிற்கு எதிராககொண்டு வரப்பட்ட 3 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், 73 வயது ரோஸ்மா மன்சோருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 970 மில்லியன் அபாரத் தொகையையும் விதித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து ரோஸ்மா செய்து கொண்ட மேல்முறையீடு தற்போது அப்பீல் நீதிமன்றத்தில் உள்ளது. அதேபோன்ற ரோஸ்மாவிற்கு எதிராக இன்னும் சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சட்டவிரோதப் பணமாற்றம் தொடர்பாக 12 குற்றச்சாட்டுகளிலிருந்து இன்று ரோஸ்மாவை விடுதலை செய்து இருக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்பினால் ரோஸ்மா அதிக மகிழ்ச்சி கொள்ள இயலாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Related News