Aug 27, 2026
Thisaigal NewsYouTube
வரும் அக்டோபர் 4-ம் தேதி நகர்ப்புற புதுப்பித்தல் மசோதாவுக்கு எதிராக பாஸ் கட்சி போராட்டம்!
அரசியல்

வரும் அக்டோபர் 4-ம் தேதி நகர்ப்புற புதுப்பித்தல் மசோதாவுக்கு எதிராக பாஸ் கட்சி போராட்டம்!

Share:

அலோர் ஸ்டார், செப்டம்பர்.13-

கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்களுக்கு ஆதரவாகவும், அரசாங்கத்தின் நகர்ப்புற புதுப்பித்தல் மசோதாவுக்கு எதிராகவும் பாஸ் கட்சி போராட்டதில் களமிறங்கவுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 4-ம் தேதி, நகர்புற புதுப்பித்தல் மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கவுள்ளதை பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அஃப்னான் ஹமிமி தையிப் அஸாமுடின் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்த நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, தாங்கள் இப்போரட்டத்தில் ஈடுபட்டு, நகர்ப்புற புதுப்பித்தல் மசோதாவுக்கும், கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் வெளியேற்ற நடவடிக்கைக்கும், தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்போம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதே வேளையில், விரைவில் மலேசியாவிற்கு வருகை புரியவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக பொதுமக்களும், பாஸ் கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அஃப்னான் ஹமிமி வலியுறுத்தியுள்ளார்.

Related News