மலேசியா ஒரு பல்லினம் கொண்ட நாடு என்று கூறப்படுவது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவித்து இருக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு எதிராக கண்டனக் கணைகள் குவிகின்றன.
மலேசியா, மலாய் மேலாதிக்கம் நிரம்பிய ஒரு நாடு என்று கூட்டரசு அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறும் துன் மகாதீர், அவற்றை தற்காப்பதே தமது நோக்கமும், கடமையாகும் என்று நேற்று அறிவித்துள்ளார்.
சிந்தனைக்குப் பொருந்தாத துன் மகாதீரின் இந்த திடீர் ஞானோதயம், பல இன மக்களிடையே கட்டிக்காக்கப்பட்டு வருகின்ற ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு அந்த முன்னாள் பிரதமர் மேற்கொள்ளும் ஆணி அடிக்கும் முயற்சியாகும் என்று பண்டார் கூச்சிங் எம்.பி. டாக்டர் கெல்வின் யீ கூறுகிறார்.
அரசியலமைப்புச்சட்டத்தில் இஸ்லாத்தின் நிலை குறித்து யாரும் சர்சை செய்யவில்லை. அதேவேளையில் அரசியலமைப்புச் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டு வரும் இனம், சமயம் பாராத மக்களின் உரிமை குறித்து கேள்வி எழுப்ப எவருக்கும் அதிகாரமில்லை என்று டாக்டர் கெல்வின் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விஷயங்களையும் அரசியல் முதலீடாக பயன்படுத்தி, அவை மக்கள் மத்தியில் எடுபடாத நிலையில் தற்போது இன வாதத்தை ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்த துன் மகாதீர் முற்படுகிறார் என்று பெந்தோங் எம்.பி. யங் ஷெஃபுரா ஒத்மான் கண்டனம் தெரிவித்துள்ளார்

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
