Oct 15, 2026
Thisaigal NewsYouTube

சுகாதாரக் காப்புறுதி கட்டண உயர்வுக்கு நியாயமான காரணங்கள் தேவை

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஜன.11-

நியாயமான காரணங்கள் இல்லாமல் சுகாதார காப்புறுதிக் கட்டணம் உயர்த்தப்பட்டால், அரசாங்கம் அதில் அனுசரணை காட்டாது. பிரதமர் Datuk Seri Anwar Ibrahim அவ்வாறு திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். கட்டண ஏற்றம் நியாயமில்லை என்று தோன்றினால், அதனைத் தாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

காப்புறுதிக் கட்டண உயர்வுக்கு வலுவான, நியாயமான காரணங்கள் அவசியம். இருதய நோய்களுக்கான சிகிச்சை வழங்கப்படும் நிலையில், உத்தரவாதம் கொடுக்கப்பட்டத் தவணைக்குள் ஏதாவது நிகழ்ந்தால், அதற்கு கட்டணக் கழிவு வழங்கப்பட வேண்டும். அத்தகைய விஷயங்களை பல நாடுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. அது போன்ற அணுகுறைகள் தேவை என பிரதமர் வலியுறுத்தினார்.

இன்று பினாங்கில் KPJ நிபுணத்துவ மருத்துவமனையின் புதிய கட்டடத்தைத் திறந்து வைக்கும் போது பிரதமர் அவ்வாறு தெரிவித்தார். அந்நிகழ்வில் பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeoவும் கலந்து கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →