Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மாலை 4 மணிக்கு 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாலை 4 மணிக்கு 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்

கோலாலம்பூர், அக்டோபர் 18-

பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று மாலை 4.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாடாளுமன்த்தில் தாக்கல் செய்யவிருக்கும் மூன்றாவது பட்ஜெட்டாக இது விளங்குவிருக்கிறது.

தமது தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கு தலைமையேற்று 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டை பிரதமர் தாக்கல்செய்யும் ,பட்சத்தில், 2021 ஆம் ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரைக்குமான ஐந்து ஆண்டு காலத்திற்குரிய 12 ஆவது மலேசியத் திட்டமும் முடிவுக்கு வருகிறது.
இதன் வழி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 13 ஆவது மலேசியத்திட்டம் தொடங்கப்படவிருக்கிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →