பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இரண்டாவது ஆண்டில் காலெடுத்து வைத்த பட்சத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருவது குறுகிய காலத்தில் எழும் கேள்வியாக கருதுவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தன்னையும் அமைச்சரவை மேம்பாட்டின் செயல்திறனை வளர்த்து கொள்ள இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவு அமைச்சர் பதவியை நிரப்புவது, அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து அவரது எண்ணங்களை சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்ததாக அவர் தெளிவுப்படுத்தினார்.
அமைச்சர்களின் செயல்பாடு தோல்வியுற்ற சூழ்நிலையில் இருந்தால் மறுசீரமைப்பு அவசியம். அப்படி இல்லாத பட்சத்தில் தன்னையும் அமைச்சரவை மேம்பாட்டின் செயல்திறனை வளர்த்து கொள்வதற்கு பதவியில் கண்டிப்பாக இருப்பதாக பிரதமர் அன்வார் கூறினார்.








