Dec 20, 2025
Thisaigal NewsYouTube
பகடிவதை சம்பவங்களை மறைக்க வேண்டாம்
அரசியல்

பகடிவதை சம்பவங்களை மறைக்க வேண்டாம்

Share:

கோலாலம்பூர், ஜன.3-


பள்ளிகளில் நிகழும் பகடிவதைச் சம்பவங்களை மறைக்க வேண்டாம் என்று பள்ளி நிர்வாகங்களுக்கு கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் நினைவூட்டியுள்ளார்.

பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்கள் தொடர்ந்து நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த இது தொடர்பான எந்தவொரு சம்பவமும் மறைக்கப்படக்கூடாது. மாறாக, அது குறித்து கல்வி அமைச்சிடம் புகார் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இத்தகைய சம்பவங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மேலும் விளக்கம் பெற அதை கல்வி அமைச்சிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஃபட்லினா சீடேக் வலியுறுத்தியுள்ளார்.

Related News