புத்ராஜெயா, டிச. 12-
அடுத்த ஆண்டு தொடங்கப்படவிருக்கும் பிஎல்கேஎன். எனப்படும் சேவை சேவை பயிற்சித்திட்டம் 3.0, கல்வி அ மைச்சுக்கும், தற்காப்பு அமைச்சுக்கும் இடையில் ஒருங்கிணைக்கப்படும்.
பள்ளி அளவில் கேடட் பயற்சி நடவடிக்கையில் ஈடுபாடு கொண்டுள்ள மாணவர்களுக்கு தேசிய சேவை பயிற்சித் திட்டத்தில் இணைவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நேற்று தாம் தலைமையேற்ற தேச தலைமைத்துவ மன்றக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு தொடங்கப்படவிருக்கும் தேசிய சேவையின் அமலாக்கம், பயிற்சிக்கான பாடமுறை, நடப்பு சூழலுக்கு ஏற்ப பயிற்சித்திட்டங்கள் அமைந்து இருப்பதை உறுதி செய்தல் உட்பட பங்கேற்பாளர்கள் நலன் சார்நத பல விவகாரங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப், உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதீர், மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அடங்குவர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.








