கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வணிகத் தளங்களுக்கான வாடகையை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 50 விழுக்காடு குறைப்பதாக அறிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடியாலும் வாழ்க்கைச் செலவின உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில், இந்தச் சலுகை 2027 டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் என கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார். எனினும், இந்தக் குறைக்கப்பட்ட வாடகைத் தொகை மாதத்திற்கு 50 ரிங்கிட்டிற்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்றும், இந்தச் சலுகையைப் பெற விரும்பும் வணிகர்கள் தங்களின் பழைய வாடகை நிலுவைகளை முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


