Aug 28, 2026
Thisaigal NewsYouTube
மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு
அரசியல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், மே.05-

மலாக்கா, ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் எப்போது தேர்தல் நடந்தாலும் அதனைச் சந்திக்க பாரிசான் நேஷனல் தயாராக இருப்பதாக அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலானில் ஆட்சி மாற்றம் குறித்த யூகங்கள் நிலவி வரும் சூழலில், அங்குள்ள 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்திலேயே நீடிப்பார்கள் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

எதிர்க்கட்சியாக மாறும் எண்ணம் அம்னோவிற்கு இல்லை என்றும், தற்போதைய மந்திரி பெசார் அமினுடின் ஹாருணை மாற்றும் திட்டம் ஏதுமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். வேட்பாளர்களை அடையாளம் காண இது இன்னும் ஆரம்பக் கட்டமே என்றும் ஸாஹிட் குறிப்பிட்டார்.

Related News