கோலாலம்பூர், அக்டோபர்.28-
வாக்காளர்கள் அதிகமாக உள்ள பெரிய நாடாளுமன்றத் தொகுதிகளை இரண்டாகப் பிரிப்பதற்கு வகை செய்யும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகையை வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் பரிசீலனை செய்யலாம் என்று சட்ட சீர்திருத்தங்களுக்கான துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.
பெரிய தொகுதிகளை இரண்டாகப் பிரிக்கும் நடவடிக்கையை எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
அந்த வகையில் அதற்கான காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு கனிகிறது. அதிகமான வாக்காளர்களைக் கொண்டுள்ள சுபாங், தெப்ராவ் போன்ற நாடாளுமன்றத் தொகுதிகளைப் பிரிப்பது குறித்து எஸ்பிஆர் பரிசீலிக்க முடியும் என்று குலசேகரன் குறிப்பிட்டார்.








