கோலாலம்பூர், அக்டோபர்.29-
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலேசியாவிற்கு வருகை புரிந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து விமான நிலையத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நடனமாடியதில் தாங்கள் பொறாமைக் கொள்ளவில்லை என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் இன்று கூட்டாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவுடன் மலேசியா செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றியே தாங்கள் அதிக கேள்வி எழுப்பியதாகவும், பிரதமர், ஒரு நடனக்காரரைப் போல் மாறியதில் தங்களுக்கு எந்த வகையிலும் பொறாமை இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்புடன் பிரதமர் அன்வார் நடனமாடியதைத் தாங்கள் பொறாமை உணர்வுடன் பார்ப்பதாகத் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்று லாருட் எம்.பி.யான ஹம்ஸா ஸைனுடின் விளக்கம் அளித்தார்.








