பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 26-
முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின், நிந்தனை சட்டத்தின் கீழ் நாளை செவ்வாய்க்கிழமை, கிளந்தான், குவா மூசாங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.
இதனை, முகைதீன் தலைமையேற்றுள்ள பெர்சத்து- கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ரசாலி இட்ரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். நாளை காலையில் குவா மூசாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கூண்டுக்குள் முகைதீன் யாசின் நிறுத்தப்படுவார் என்று அவர் விளக்கினார்.
கிளந்தான், குவா முசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சர்சைக்குரிய விஷயத்தை பேசியது தொடர்பில் நிந்தனை சட்டத்தின் கீழ் முகைதீன் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்..
கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாட்டின் பிரதமராகுவதற்கு தமக்கு 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும், அன்றைய பிரதமர், தம்மை இஸ்தானவிற்கு அழைக்கவில்லை என்று முகைதீன் கூறியது தொடர்பில் அவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டிருந்தன.








