கோலாலம்பூர், நவ. 15-
தொடக்கப்பள்ளிகளில் கால்பதிப்பதற்கு முன்னதாகவே பாலர் பள்ளியில் மாணவர்கள் மலாய் மற்றும் ஆங்கிலுத்தில் அடிப்படை ஆளுமையை கொண்டு இருப்பதை உறுதி செய்வதற்கு வரும் 2026 கல்வி ஆண்டில் இரு மொழி பாடமுறையை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவிருப்பதாக அதன் அமைச்சர் பட்லீனா சீடேக் தெரிவித்தார்.
மலாய் மொழி 50 விழுக்காடும், ஆங்கில மொழி 50 விழுக்காடும் உள்ளடக்கிய நிலையில் இருமொழிகளின் சீரான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பாலர் பள்ளியில் இந்த பாடத்திட்டம் 2026 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் பட்லீனா சீடேக் விளக்கினார்.








