நவ. 27-
இந்திய சிறு வணிகர்களுக்கு உதவும் நோக்கில் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள SME Corp. Malaysia மூலமாக இந்திய சிறு வர்ததகர்களின் 20 நிறுவனங்களுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி, இன்று பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இந்திய சிறு வணிகர்களுக்கு உதவுவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட I-BAP ( ஐ- பாப் ) திட்டத்தின் வாயிலாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், இந்திய சிறு வணிகர்களின் 20 நிறுவனங்களுக்கு இந்த 1.5 மில்லியன் ரிங்கிட் நிதி உதவியை பகிர்ந்து அளித்தார்.

I-BAP திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தம் 6 மில்லியன் ரிங்கிட்டில் முதல் கட்டமாக 1.5 மில்லியன் ரிங்கிட் 20 பேருக்கு பகிரந்தளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 4.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு, 50 க்கும் மேற்பட்ட இந்திய சிறுவணிகர்களுக்கு அவர்களின் வணிகத்தன்மைக்கு ஏற்ப அங்கீரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவில் கட்டம் கட்டமாக அந்த நிதி உதவி பகிர்ந்து அளிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
இந்திய சிறு வணிகர்களின் மேம்பாட்டுக்காக I-BAP திட்டத்தின் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதி உதவித் திட்டத்தில் முதல் கட்டமாக 20 வணிகர்களுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை இன்று பகிர்ந்தளித்தப்பின்னர் செய்தியார்ளகளிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ ரமணன் இதனை தெரிவித்தார்.

இந்த I-BAP நிதி உதவித்திட்டம் சிறுவணிகர்களுக்கு கூடிய பட்சம் ஒரு லட்சம் வெள்ளி வரையில் நிதி உதவி வழங்க வகை செய்கிறது என்பதையும் டத்தோஸ்ரீ ரமணன் சுட்டிக்காட்டினார்.

இந்திய சிறு வணிகர்கள் தங்களின் தொழில் திறன் ஆற்றலையும், அடைவு நிலையையும் விரிவுப்படுத்திக்கொண்டு, தாங்கள் சார்ந்த சிறு தொழிலில் முன்னேறுவதற்கு அவர்களின் தொழிலுக்கு அடிப்படையாக விளங்கக்கூடிய உபகரணங்களை வாங்கிக்கொள்வதற்கு I-BAP நிதி உதவித்திட்டத்தின் வாயிலாக தமது அமைச்சு உதவிக்கரம் நீட்டி வருவதாக டத்தோஸ்ரீ ரமணன் தெளிவுபடுத்தினார்.








