டிச. 11-
MyHELP என்ற இணையத்தளம் வாயிலாக மருத்துவ ஊழியர்களிடமிருந்து பெறப்பட்டப் புகார்களில், பகடி வதை தொடர்பான நான்கு புகார்கள் உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புகார்கள் தொடர்பாக கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Dzulkefly Ahmad தகவல் வெளியிட்டார்.
அந்தப் புகார்களில், பணி தொடர்பான பிரச்சினைகள், பதவி உயர்வு, பணி இடமாற்றம், நிர்வாகப் பிரச்சினைகள் போன்றவை அடங்கும். இளம் மருத்துவ அதிகாரிகளை சமாளிக்க, சுகாதார அமைச்சகம் ஒரு சிறப்பு குழுவையும் வழிகாட்டுதல் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.
மருத்துவ ஊழியர்களின் மனநலப் பிரச்சினைகளைக் கையாள, சுகாதார அமைச்சு அவசர அழைப்பு, ஆலோசனை. ஆன்லைன் மனநல பரிசோதனை போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது. ஒவ்வொரு மாநிலம் மட்டும் இன்றி மாவட்ட நிலையிலும் மருத்துவ ஊழியர்களின் மனநலப் பிரச்சினைகளைக் கையாள ஒரு சிறப்பு குழு செயல்படுவதாக அமைச்சர் Dzulkefly மேலும் சொன்னார்.








