ஷா ஆலாம், டிசம்பர்.10-
தம்முடைய தவணைக் காலம் முடியும் வரையில் தொடர்ந்து சிலாங்கூர் மந்திரி பெசாராக பதவி வகிக்கப் போவதாக டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அம்பாங் தொகுதியில் ஓர் இடைத் தேர்லை ஏற்படுத்தி, பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸாவை சிலாங்கூர் மந்திரி பெசாராகக் கொண்டு வரும் முயற்சி நடப்பதாக அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி அண்மையில் அம்பலப்படுத்தினார்.
இந்நிலையில் நூருல் இஸாவிற்கு வழிவிடுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அறிவித்து வந்த அமிருடின் ஷாரி, தம்முடைய தவணைக் காலம் முடியும் வரை தொடர்ந்து மந்திரி பெசாராக நீட்டிக்கப் போவதாக அறிவித்தார்.
அதே வேளையில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிக்கவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் அமிருடின் ஷாரிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.








