நவ. 7-
மலேசியாவின் இரண்டாவது 5ஜி அலைக்கற்றல் வழங்குநராக U MOBILE நிறுவனத்தைத் தேர்வு செய்யும் மதிப்பீட்டில் தாமும், தமது துணையமைச்சர் Teo Nie Ching- கும் சம்பந்தப்படவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர் பஹ்மி ஃபாட்சில் இன்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.
மலேசியாவின் இரண்டாவது 5ஜி அலைக்கற்றல் வழங்குநராக யூ மொபைலைத் தேர்ந்தெடுக்கும் முடிவு, தனிநபர் உரிமத்திற்கான சிறப்பு உரிம நிபந்தனைகளுக்கு எதிரானது அல்ல என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
முறையான பொது டெண்டர் மூலமே சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதையும் பஹ்மி ஃபாட்சில் சுட்டிக்காட்டினார்.
இரண்டாவது 5ஜி அலைக்கற்றலைச் செயல்படுத்த மத்திய அரசு, யூ மொபைலுக்கு உரிமம் வழங்கியதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரிம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் பஹ்மி ஃபாட்சில் இதனை தெரிவித்தார்.








