Aug 26, 2026
Thisaigal NewsYouTube
தாம் இல்லையென்றால், மலாக்காவில் அம்னோவின் அரசாங்கம் அமைந்திருக்காது
அரசியல்

தாம் இல்லையென்றால், மலாக்காவில் அம்னோவின் அரசாங்கம் அமைந்திருக்காது

Share:

மலாக்கா, ஜூலை

PAS கட்சியில் இணைந்ததற்காக, தம்மை சாடிவரும் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மல் சலே , மலாக்காவில் அம்னோ தலைமையிலான அரசாங்கம் மீண்டும் அமைவதற்கு, தமது பங்களிப்பும் உள்ளதை நினைவில் கொள்ள வேண்டுமென ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜெய்லானி காமிஸ் வலியுறுத்தினார்.

2020ஆம் ஆண்டில், அப்போதைய பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கத்திற்கான ஆதரவை தாம் மீட்டுக்கொண்ட பின்னரே, தேசிய முன்னணி, அரசாங்கத்தைக் கைப்பற்றியது.

அதன் தொடர்ச்சியாக, 2021ஆம் ஆண்டு ஜூனில் நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில், டாக்டர் அக்மல் சலே சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மெர்லிமாவ் தொகுதி உள்பட அம்னோ 28 தொகுதிகளில் 21 தொகுதிகளைக் கைப்பற்றியதை ஜெய்லானி நினைவுறுத்தினார்.

Related News