ஜொகூர், அங்சானா ஜோகூர் பாரு மால் - லில் நேற்று இரவு 2024 ஆம் ஆண்டுக்கான ஒற்றுமை வார நிகழ்ச்சி தேசிய அளவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
"Perpaduan Dalam Galangan" எனும் கருப்பொருளுடன் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சி ஒற்றுமையின் உணர்வினை தூண்டுவதை பிரதான நோக்கமாக கொண்டிருப்பத்துடன் மலேசியாவில் உள்ள பல்வேறு பழக்க வழக்கங்கள் உட்பட கலாச்சாரங்களை பற்றி அறிந்து கொள்வதற்கும் அதை பரப்புவதற்கும் ஒரு முக்கிய அம்சமாக அமைகிறது என்றார் பிரதமர் அன்வார்.

அதுமட்டுமின்றி, இந்த ஒற்றுமை வார நிகழ்ச்சி, ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மலேசிய மடானி - யின் வளர்ச்சி குறித்த கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ஓர் அடித்தளமாக இருக்கும் என்றார் பிரதமர்.









