கோலாலம்பூர், நவ. 14-
போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில் சாலை போக்குவரத்து இலாகா மூலமாக வாகனங்களுக்கான பதிவு எண்களை டெண்டர் மூலம் விற்பனை செய்வதில் தாம் அதிக கவனம் செலுத்துவதாக கூறி, தம்மை நம்பர் பிளேட் அமைச்சர் என்று முத்திரைக்குத்தியுள்ள தரப்பினர் குறித்து தாம் கவலைக் கொள்ளவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரவித்தார்.
GOLD, FF, MM மற்றும் மடானி போன்ற தனித்துவமான வாகனப் பதிவு எண்களுக்கான நம்பர் பிளேட் வெளியிடப்பட்டது தொடர்பில் தாம் நம்பர் பிளேட் அமைச்சர் என்று சில தரப்பினர் முத்திரைக்குத்துவதாக அந்தோணி லோக், நகைச்சுவை இழையோட கூறினார்.
தனித்துவமான நம்பர் பிளேட்டுகளை டெண்டர் விடுவது மூலம் சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே- விற்கு அதிக வருமானம் கிடைக்கிறது. தம்முடைய அமைச்சின் கீழ் செயல்படும் ஓர் இலாகாவின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்காக தாம் நம்பர் பிளேட் அமைச்சர் என்று முத்திரைக் குத்தப்பட்டத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அந்தோணி லோக் விளக்கினார்.








