Oct 24, 2025
Thisaigal NewsYouTube
Tanah Lapang Awam எனப்படும் பொது வெளி நிலங்களை அதிகாரப்பூர்வமாக்க ஆணையிடப்பட்டுள்ளது
அரசியல்

Tanah Lapang Awam எனப்படும் பொது வெளி நிலங்களை அதிகாரப்பூர்வமாக்க ஆணையிடப்பட்டுள்ளது

Share:

டிச.8-

2025 முதல் அனைத்து ஊராட்சி மன்றங்களும் Tanah Lapang Awam எனப்படும் பொது வெளி நிலங்களை அதிகாரப்பூர்வமாக்க ஆணையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயம் நிலங்கள் தவறான முறையில்பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முடியும். இதுவரை நாட்டில் உள்ள 20,868 ஹெக்டர் நிலங்களில் 39 விழுக்காடு பொது வெளி நிலங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன என வீட்டுவசதி, ஊராட்சி மன்ற அமைச்சர் Nga Kor Ming தெரிவித்தார்.

பொது வெளி நிலங்களைப் பாதுகாப்பது, மலேசியாவை பூங்கா நகரமாக மாற்றுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும். குறிப்பாக, அமைச்சு தற்போது குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் மடானி பொழுதுபோக்கு பூங்காவைசூருவாக்கி வருகிறது.

பல பொது வெளி நிலங்கள் விவசாயத்திற்கும் கடை வளாகங்களைக் கட்டுவதற்கும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் புதிய ஆணையின் மூலம் இதுபோன்ற தவறான பயன்பாட்டைத் தடுக்க முடியும். என்றார் அவர்.

பூங்காக்கள் மக்களின் மனநலத்தை மேம்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவுகின்றன. எனவே, பூங்காக்களை உருவாக்குவதற்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

சாலை ஓரங்களில் நடுவதற்கு ஏற்ற 200 வகையான உள்ளூர் பூர்வ மரங்களின் பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இது மரங்கள் விழுந்து ஏற்படும் சேதத்தைத் தடுக்கும். மேலும், நாடு முழுவதும் 109 நிலப்பரப்பு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது அமைச்சு என ஙா கோர் மிங் மேலும் சொன்னார்.

Related News