கோலாலம்பூர், ஜூன் 27-
புத்ராஜெயாவில் நாளை மறுநாள் சனிக்கிழமை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக எதிர்ப்பு பேரணி நடத்தப்படும் திட்டத்தை கைவிடுமாறு அதன் ஏற்பாட்டாளர்களுக்கு போலீசார் துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரக்யாத் லவன் அன்வார் என்ற தலைப்பில் நடத்தப்படவிருக்கும் பிரதமருக்கு எதிரான அந்த எதிர்ப்பு பேரணியை, நாட்டின் நலனை கருத்தில் கொண்டு கைவிட வேண்டும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி இசா கேட்டுக்கொண்டார்.
இந்தப் பேரணியை புத்ராஜெயா கழகமய வளாகத்தில் பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்திற்கு முன்புறம் நடத்தப்படுவதை திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வளாகத்தில் இது போன்ற சட்டவிரோதப் பேரணியை நடத்தப்படுவதற்கு நில உரிமையாளர் அனுமதி வழங்கவில்லை. அதேவேளையில் பொது அமைதி சட்டம் 736 ஆவது பிரிவின் கீழ் இத்தகைய பேரணி நடத்தப்படுவதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பாக போலீஸ் துறையிடம் 14 நாட்களுக்கு முன்பு அப்பேரணி தொடர்பான நோட்டீஸ் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.
எந்தவொரு விண்ணப்பமும் வழங்கப்படாமல் பிரதமருக்கு எதிர்பாக பேரணி நடத்தப்படுவது சட்டவிரோத செயலாகும் என்று ருஸ்டி இசா விளக்கினார்.








