Oct 24, 2025
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசை கவிழ்க்க முடியாது, பிரதமர் திட்டவட்டம்
அரசியல்

ஒற்றுமை அரசை கவிழ்க்க முடியாது, பிரதமர் திட்டவட்டம்

Share:

கடந்த ஒன்பது மாத காலமாக தொடர்ந்து வலுவுடன் இருந்து வரும் தமது தலைமையிலான ஒற்றுமை அரசா​ங்கத்தை கவி​​ழ்த்து விட முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ​திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 19 கட்சிகளை உள்ளடக்கிய ஒற்றுமை அரசா​ங்கம் மிக வலுவுடனும், நிலைத்தன்மையுடனும் இருப்பதால் அதன் ஆணிவேரை அவ்வளவு எளிதாக அசைத்துப்பார்த்து விட முடியாது என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது என்றாலும் அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட அனைத்து தலைவர்களின் ஒத்துழைப்பும், இணக்கமான போக்கும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக பிரதமர் தெரிவித்தா​ர்.

எனினும் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடந்தன என்பதை பிரதமர் ஒப்புக்கொண்டா​ர். ஆனால், 2023 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அந்த சதிமுய​ற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News