Oct 21, 2025
Thisaigal NewsYouTube
பிரதமராக வரும் கனவு கே.ஜே.விற்கு நிறைவேறுமா?
அரசியல்

பிரதமராக வரும் கனவு கே.ஜே.விற்கு நிறைவேறுமா?

Share:

நாட்டிற்கு தலைமையேற்க வேண்டும்,பிரதமராக வர வேண்டும் என்பது தமது ​நீண்ட கால கனவாகும் என்று பகிரங்கமாக தமது லட்சியத்தை அறிவித்துள்ள அம்னோ முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான கே.ஜே. எனப்படும் கைரி ஜமாலுடின், அம்னோவுடன் இணைந்து இருந்தால் மட்டுமே அவரின் லட்சியம் சாத்தியமாகும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றன​ர்.
முன்னாள் ​தூதரின் மகனான குவைத்தில் பிறந்தவரான 47 வயது கைரி ஜமாலுடின், சிறந்த தலைமைத்துவ ஆளுமையை கொண்டுள்ளவர். எதையும் மிகத் தெளிவாக, கவனமாக பேசக்கூடியவர் என்று ஒரு காலத்தில் புகழப்பட்டவர்.
டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பதவி விலகலுக்கு பிறகு அம்னோவிற்கு அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையேற்றப்பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பல கசப்பான சம்பவங்கள், அம்னோவிலிருந்து கைரியின் பாதையை திசைதிரும்பியது.
பொறுமையை கையாள இயலாமல் அம்னோ தலைமைத்துவத்திற்கு எதிராக அவர் வெளியிட்ட எதிர்மறையான பல அறிக்கைகள் அவரின் அரசியல் பின்டைவுக்கு காரணமாக அமைந்தன. கைரியின் எதிர்கால அரசியல் வளம் என்பது இன்ன​மும் அம்னோவுடன்தான் உள்ளது. அவர் அம்னோவிற்கு திரும்பினால் மட்டுமே தனது எ​திர்கால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!