தெமர்லோ,செப்டம்பர் 14-
பாஸ் கட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் இணை உறுப்பினர்களாக சேர்வதை கட்சி வரவேற்பதாக அதன் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தகியுதீன் தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சியின் அமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர் அதன் இணை உறுப்பினர்களாக முஸ்லீம் அல்லாதவர்கள் சேர முடியும் என்று பகாங், தெமர்லோவில் நடைபெற்று வரும் பாஸ் கட்சியின் Muslimat மாநாட்டில் தக்கியுடீன் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சியின் நடப்புச் சட்டத்தின்படி அதில் இணையக்கூடிய ஓர் உறுப்பினர் முஸ்லீமாக இருக்க வேணடும். அதேவேளையில் முஸ்லீம் அல்லாதவர்கள் இணை உறுப்பினர்களாக சேர்வதற்கு ஏதுவாக நாளை நடைபெறும் மாநாட்டில் கட்சியின் அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.








