Dec 21, 2025
Thisaigal NewsYouTube
அம்னோ ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக உறுவெடுக்க வேண்டும்
அரசியல்

அம்னோ ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக உறுவெடுக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-

ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஒரு துணையாக மட்டும் இருக்காமல், தற்போதைய அரசாங்கத்தில் ஆளுமையுள்ள ஆதிக்கம் செலுத்தும் காட்சியாக அம்னோ செயல்பட வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அக்மல் சலே சூளுரைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, மக்களவையில் உள்ள அம்னோவின் 26 உறுப்பினர்களளின் எண்ணிக்கை மூன்றி இரண்டு பங்காக அதிகரிக்கப்பட்டு நாட்டில், ஆதிக்கம் செலுத்தும் ஒரு கட்சியாக அம்னோ உருவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு, அம்னோவை வலுவான கட்சியாக மாற்றுவதற்கு, அதன் தலைவர்அஹ்மத் ஜாஹித் ஹமிடி -க்கு தமது தரப்பு முழு ஒத்துழைப்பையும் நம்பிக்கையையும் வழங்கும் என்றார் அவர்.

கோலாலம்பூர், WTCKL -இல் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு அம்னோ பொது சபையில், இன்றைய இளைஞர் தலைவர்களின் கொள்கையைக் குறித்து உறையாற்றும் போது அக்மல் சலே அவ்வாறு தெரிவித்தார்.

இதற்கிடையில், 3R விவகாரத்தைத் தொடர்புப்படுத்தி கருத்து வெளியிடும் யாரையும் அம்னோ இளைஞர் பிரிவு எதிர்க்கும் என்ற நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், மஹ்கோட்டா சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அம்னோ இளைஞர்கள் தயாராக இருப்பதையும் அக்மல் சலே சுட்டிக்காட்டினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்