Dec 21, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூரில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க வலியுறுத்தல்
அரசியல்

ஜோகூரில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க வலியுறுத்தல்

Share:

ஜொகூர் , செப்டம்பர் 30-

மஹ்கொட்ட சட்டமன்ற இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றி பெற்ற நிலையில் ஜோகூர் மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை காலம் முடிவு செய்யட்டும் என அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கருத்துரைத்துள்ளார்.

முன்னதாக ஜோகூர் மாநிலத்தில் தேசிய முன்னணியும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியும் இணைந்திருக்க வேண்டும் என ஒரு சில தரப்பினர் முன்வைத்த வலியுறுத்தல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு காலிட் நோர்டின் மேற்கண்டவாறு பதில் கூறினார்.

ஜோகூர் மாநிலத்தை பொறுத்தவரையில் தற்போது பாரிசான் நேஷனலும், பக்காத்தான் ஹராப்பானும் இன்னும் ஆழமாக புரிந்துகொள்வது அவசியமாகின்றது.

அதுமட்டுமின்றி பாரிசான் நேஷனல், பக்காத்தான் ஹராப்பான் இடையிலான புரிந்துணர்வு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறினார்.

முன்னதாக, மாக்கோத்தா சட்ட மன்ற இடைத்தேர்தலில் அதிகப் பெரும்பான்மையில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் வெற்றி பெற்றதை அடுத்து ஜோகூரில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என அமானா கட்சி இளைஞர் பிரிவுத் தலைவர் ஹேஸ்பிள் மூடா கருத்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்