சலவைத் தூள் பாக்கெட்டுகளில் 33 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படும் முயற்சியை சுங்கத்துறை முறியடித்துள்ளது. சபா, கோத்தா கினபாலுவில் உள் செபங்கர் துறைமுகத்தில் சுங்கத்துறை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் சியாபு வகையைச் சேர்ந்த 100 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாண்டில் சபா சுங்கத்துறை கைப்பற்றியுள்ள மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் இதுவாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர், கோலக்கிள்ளானிலிருந்து வந்தடைந்த கொள்கலன் ஒன்றில் போதைப்பொருள் இருப்பதாக கிடைக்கப்பட்ட உளவுத்தகவலின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுங்கத்துறை தலைமை இயக்குநர் ஜாசுலி ஜோஹன் தெரிவித்தார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


