Apr 20, 2026
Thisaigal NewsYouTube
சுகுட் தொகுதியில் ரோனல்ட் கியாண்டி தோல்வி
அரசியல்

சுகுட் தொகுதியில் ரோனல்ட் கியாண்டி தோல்வி

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.29-

டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உதவித் தலைவரும், சபா மாநிலத் தலைவருமான டத்தோ ஶ்ரீ ரோனல்ட் கியாண்டி, சபா தேர்தலில் தாம் போட்டியிட்ட சுகுட் தொகுதியில் தோல்விக் கண்டார். ரோனல்ட் கியாண்டிக்கு வெறும் 1,406 வாக்குகளே கிடைந்தன.

ஆளும் GRS கூட்டணியின் பலம் பொருந்திய வேட்பாளரான Datuk James Ratob- பிடம் ரோனல்ட் கியாண்டி தோல்விக் கண்டார். Datuk James Ratob- பிற்கு 2,135 வாக்குகள் கிடைத்தன. சுகுட் தொகுதியில் பதிவு பெற்ற 18 ஆயிரத்து 435 வாக்காளர்கள் உள்ளனர்.

Related News