Dec 19, 2025
Thisaigal NewsYouTube
நஜிப் விவகாரத்தில் நடைமுறைகளை அரசாங்கம் கடைப்பிடித்தது
அரசியல்

நஜிப் விவகாரத்தில் நடைமுறைகளை அரசாங்கம் கடைப்பிடித்தது

Share:

கோலாலம்பூர், ஜன.8-


முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்பில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் பொது மன்னிப்பை நடைமுறைப்படுத்தியதில் அரசாங்கம் அனைத்து வழிமுறைகளையும் கடைப்பிடித்துள்ளது என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியன் இஸ்மாயில் கடந்த திங்கட்கிழமை பொது மன்னிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளபோதும், கூடுதல் நடவடிக்கைகளுக்காகவும் முடிவுக்காகவும் அரசாங்கம் அதனை நீதிமன்றத்திடமே விட்டுவிடுவதாக அரசாங்கப் பேச்சாளருமான ஃபாமி தெரிவித்தார்.

பொது மன்னிப்பு வாரியத்திடமிருந்து கடிதத்தைப் பெற்ற உள்துறை அமைச்சு அனைத்து நடைமுறைகளுக்கும் இணங்கி, சட்டத்தின் அடிப்படையில் அதனை நடைமுறைப்படுத்தியது.

அரச ஆணை குறித்த விவரங்கள் பின்னர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றார் ஃபாமி.

இந்நிலையில், நஜிப்பின் வழக்கில் அரச ஆணை தொடர்பாக எதுவும் மறைக்கப்படவில்லை என்று ஃபாமி விளக்கினார்.

நீதித்துறையை அரசாங்கம் எப்போதும் மதிக்கிறது. அதன் மாண்பையும் செயல்முறையையும் மிக நுட்பமாக சிந்திக்க இயலாதவர்களால் அதன் அடிவேரையும், தன்மையும் புரிந்து கொள்ள முடியாது என்று ஃபாமி விளக்கினார்.

அரச ஆணை உத்தரவை அரசாங்கம் மறைப்பதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தனிநபர்களுக்கு எதிராக நாடு முழுதும் போலீசில் புகார் செய்யப்படும் என்று ஃபாமி நினைவுறுத்தினார்.

Related News