Jan 18, 2026
Thisaigal NewsYouTube
பாரம்பரியத் தொகுதிகளை மஇகா கோருவதா?
அரசியல்

பாரம்பரியத் தொகுதிகளை மஇகா கோருவதா?

Share:

ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அங்கமாக விளங்கும் மஇகா, விரைவில் நடைபெறவிருக்கும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் தனது பாரம்பரியத் தொகுதிகளில் போட்டியிடப் போவதாக கூறப்படும் வாதத்தைப் பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி நிராகரித்துள்ளார்.
பினாங்கில் பாகான் டலாம் மற்றும் பிராய் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 2008, 2013 மற்றும் 2018 ஆகிய 3 பொதுத் தேர்தல்களில் மஇகா படுதோல்விக் கண்டது.
மூன்று பொதுத் தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்விக் கண்டுள்ள மஇகா, அந்த இரு தொகுதிகளையும் தனது பாரம்பரியத் தொகுதிகள் என்று எவ்வாறு கூறிக்கொள்ள முடியும் என்று டாக்டர் இராமசாமி வினவினார்.
இரு தொகுதிகளிலும் மஇகா தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அவை தங்களின் பாரம்பரியத் தொகுதிகள் என அக்கட்சி கூறிக்கொள்வது வியப்பை அளிக்கிறது என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News