டிச. 7-
பாரிசான் நேஷனலின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம், கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது. நாட்டின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக், கடந்த 1974 ஆம் ஆண்டு, படகு சின்னதத்தை தாங்கிய Perikatan எனப்படும் கூட்டணி கட்சிக்கு பதிலாக பாரிசான் நேஷனல் என்ற தராசு சின்னத்தை தாங்கிய புதிய கூட்டணியை அறிமுகப்படுத்தினார்.
நேர்மை, திறமை, நம்பிக்கை என்ற மூன்று சுலோகங்களை தாங்கி, உதயமான பாரிசான் நேஷனல், 1974 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் நான்காவது பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, நாட்டின் ஆட்சியை தற்காத்துக்கொண்டது.
இவ்வருடத்துன் 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழாவை கொண்டாடும் வகையில் உலக வர்த்தக வாணிப மையத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது.
பாரிசான் நேஷனலின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவினர் முன்னிலை வகித்து இந்நிகழ்வை நடத்தி வருகின்றனர்.








